நாசரேத்,ஏப்.26: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடையக் கூடாரத்தில் நடைபெற்ற திறப்பின் வாசல் முகாம் சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்தே பார்த்துக் கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடையக் கூடாரத்தில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை திறப்பின் வாசல் முகாம் நடைபெற்று வருகிறது.கொரோனோ தொற்றுநோய் பாதிப்பால் இந்தியா முழு வதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த மாதமும்,இந்த மாதமும் திறப்பின்வாசல்முகாம் நடத்தாததால் சமூகவலைத்தளங்களிலும்,உள்;ர் தொலைக் காட்சி சேனல்களிலும் திறப்பின்வாசல்முகாம் ஒளிபரப்பப்பட்டது.
இதனை பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளில் இருந்தே பார்த்துக் கொண்டே இறைவனை ஆராதித்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சகோ. அப்பாத்துரை சிறப்பு செய்தி கொடுத்தார். சகோ. மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை இந்திய தேசம், உலக நாடுகளில் நடமாடும் கொள்ளைநோய் முற்றிலுமாக அழியவும்,மக்களுக்காகவும் சிறப்பு பிரார்த் தளையை ஏறெடுத்தார்.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.