தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே தெற்கு செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயக்கர் மகன் வேங்கடசாமி நாயக்கர். இவருக்கு அந்த பகுதியில் எலுமிச்சம் பழ தோட்டம் இருக்கிறது.

அந்த தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சிலர் இன்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மழை பெய்தது. எதிர்பாராத விதமாக திடீரென இடி,மின்னல் தாக்கியது.
இடி, மின்னல் தாக்கியதில் வேலை செய்து கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி(65), காலனி தெருவை சேர்ந்த ஜெயராஜ் மனைவி கருப்பாய் வயது(35) ஆகிய இருவரும் அதில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டார்கள்.
இரண்டு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பசுவந்தனை போலீஸா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.