1000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்! – மோகன் சி.லாசரஸ் நேரில் வழங்கினார்!!

0
77
nalumavadi news

நாசரேத்,ஏப்.29:தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் 1000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை சகோ. மோகன் சி. லாசரஸ் வீடுகளுக்கு தாமே நேரில் சென்று வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளைசார்பில் நாலுமாவடி கிராமத்திற்குட்பட்டபகுதியில் பொருளாதா ரத்தில் பின்தங்கியமக்களுக்கு சண்முகசுந்தரநகர்,லெட்சுமிபுரம்-புதூர்,சுந்தரமூர்த்தியா புரம்,அருந்ததியர்காலணி,திருச்செந்தூர்,ஏரல் ஊர்களிலுள்ள நரிக்குறவர்கள்காலணி, குரும்பூர் வேன்டிரைவர்கள்சங்கத்தினர்,மாற்றுத்திறனாளிகள்,விதவைகள்,கூலித்தொழி லாளர்கள், ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட 1000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள் களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியநிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் புதுக்கிராமம் பகுதியில் தாமேநேரில் வீடுகளுக்குசென்று வழங்கினார்.

மீதமுள்ளவர்க ளுக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணிபுரிபவர்கள் வழங்கினர். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியநிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் உடன் நாலுமாவடி கிராம நிர்வாக அதிகாரி தேசிகன்,நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய மக்கள் தொடர்பு அலுவலர் து.சாந்தகுமார், ஊழியர்கள் பிரேம் வெஸ்லி, ஜேக்கப் உள்பட பலர் நிவாரணப் பொருள்கள் வழங்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here