சிவ சேனாவுக்கு சரத்பவார் டாட்டா – பாஜக சொல்லை கேட்டே ஆகவேண்டும் சிவசேனா

0
40
sarathpawaar

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. அதிக இடத்தில் வென்ற பாஜக, சிவசேனா இடையே ஒருமித்த கருத்து உருவாக வில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. அதிக சீட் எடுத்த பாஜக, தனக்குத்தான் முதல்வர் பதவி என்கிறது. அதற்கு அடுத்தபடியாக சீட் வாங்கிய சிவசேனா தனக்குத்தான் முதல்வர் பதவி என்று மல்லுகட்டுகிறது.

இதற்கிடையே ஆட்சி அமைக்க முடியாத அளவிற்கு குறைவான சீட் களை பெற்ற தேசியவாத காங்கிரஸும் அகில இந்திய காங்கிரசும் எதிர் வரிசையில் உட்கார தயாராகிவிட்டது. இந்தநிலையில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சிவசேனா கட்சி பிரமுகர் சந்தித்தார்.

அதன் பிறகு ’தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைந்த்து முதல்வர் ஆகிவிடுவோம்’ என்று சிவசேனா மிரட்டியது. இன்னொருபுறம் ‘சீக்கிரம் முடிவெடுக்காவிட்டால் மாகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கும்’ என்று பாஜக மிரட்டிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப்பவார் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ’’மக்கள் எங்களை எதிர்கட்சியாக அமரவே வாக்களித்திருக்கிறார்கள். பாஜக, சிவசேனா இடையே நடந்து வரும் மோதல் குழந்தை தனமானது. சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தருமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

அது குறித்து கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை.மக்களின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். எங்களிடம் பெரும்பான்மை இல்லை. எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முறையாக செயல்படுத்துவோம். ஆட்சி அமைப்பதற்கு மக்கள், பாஜக, சிவசேனாவுக்கே வாய்ப்பளித்துள்ளனர். அவர்கள் அதை சரியாக பயன்படுத்த வேண்டும். இப்போது நடந்து கொண்டிருப்பதை பார்த்தால் சிறுகுழந்தைகளின் விளையாட்டு போலவே தோன்றுகிறது’’ என்றார்.

பிடிவாதம் பிடித்துவரும் சிவசேனா சரியான முடிவை விரைவில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே ந்பாஜகவின் பேச்சை அவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். அத்தகைய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here