ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட முடிதிருத்தும் நிலையங்கள் பூட்டி சீல் வைப்பு – தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி !

0
148
thoothukudi corporation

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மூலம் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை : –

’’தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு சில இடங்களில் ஊரடங்கு உத்திரவை மீறி முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்படுவது கள ஆய்வில் தெரிய வருகிறது. மேற்படி கடைகள் செயல்படுவதால் கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

இம்மாநகராட்சியில் இந்தியாவில் தமிழகத்தில் சலூன் கடைகள் மூலம் கொரோனா நோய் பலருக்கு பரவியுள்ளதாக பத்திரிக்கை செய்தி வாயிலாக அறிந்துள்ள நிலையில் மேற்படி கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாததோடு மீறி செயல்பட்ட 14 கடைகள் இதுவரையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்படி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மறைமுகமாகவும், வீடுகளுக்கு சென்றும் முடி திருத்தம் செய்துவருவது ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முடி திருத்தும் தொழில் செய்பவர் அல்லது செய்து கொள்பவர் யாருக்கேனும் நோய் தொற்று இருப்பின் 100சதவீதம் நோய் பரவலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால் மேற்படி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் மேற்படி செயலில் ஈடுபட வேண்டாம் என தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறி செயல்படுவோர் மீது கொள்ளை நோய் தடுப்புச் சட்டவிதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்ற விபரம் மாநகராட்சி செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here