மோடி_கிச்சன்_என்ற பெயரில் கோவில்பட்டியில் உணவு வழங்கிய பாஜகவினர் !

0
83
kovilpatti bjp

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் தங்கள் உணவுத்தேவையை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிச்சன் என்ற பெயரில் உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.

முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் அமுதா மற்றும் முன்னாள் ST அணி பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் ஏற்பாடு செய்து இருந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் பாலாஜி, சட்ட மன்ற பொறுப்பாளர் பாலு, மாவட்ட பேச்சாளர் லட்சுமனகுமார், நகர பொது செயலாளர் முனிராஜ், சீனிவாசன், முன்னாள் நகர துணை தலைவர் நல்ல தம்பி, இளைஞர் அணி குருதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here