பக்தர்கள் மத்தியில் ஆணவம் அழித்து அவதார மகிமையை உணர்த்தினார் திருச்செந்தூர் செந்திலாண்டவர் !

0
334
ticr news

ஆணவம் அழித்து அவதார மகிமையை உணர்த்திய திருச்செந்தூர் செந்திலாண்டவரின் சூரசம்ஹார விழா லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்த்தில் இன்று மாலை நடந்தது. அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி கோஷம் முழங்கியது.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் அழகியதும், அலைவீசும் கடலருகே அமைந்துள்ள தனிசிறப்பு பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்நகரில் தான் சூரபத்மனை வதம் செய்து சிவபெருமானை வழிப்பட்ட புண்ணிய ஸ்தலமாகும். இதனால் இக்கோயிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா உலக பிரசித்தி பெற்றது. சிறப்பு மிக்க இத்திருவிழா கடந்த 28ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

தினமும் அதிகாலை 7 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வெள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் நடந்தன. யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை முடிந்ததும், சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது.

பின்னர் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ள, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீரவாள் வகுப்பு வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலா மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்கதேரில் சுவாமி கிரி பிரகாரம் வலம் வந்த கோயிலை சேர்ந்தார்.

சூரசம்ஹாரம்: சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதிகாலை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிகக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு பகலில் உச்சிகால தீபாராதனை, அதனை தொடர்ந்து சஷ்டி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நட்நதது. தொடர்ந்து தங்கசப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 1.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கிருந்து திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம நடந்தது.

தொடர்ந்து 4 மணிக்க சூரசம்ஹாரத்திற்கு சுவாமி ஜெயந்திநாதர் ஆயத்தமானார். மாலை 4.30 மணிக்கு சம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளி கடற்கரைக்கு புறப்பட்டார். முன்னதாக மதியம் 2.30 மணிக்கு சிவன் கோயிலிருந்து சூரபத்மன் புறப்பட்டு ரதவீதிகள் சுற்றி கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்.

அதனை தொடர்ந்து கோயில் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் முருகப்பெருமான் சூரனுடன் போரிடும் நிகழ்ச்சி துவங்கியது. அதற்கு முத்தாய்ப்பாக வானத்தில் கருடன் வட்டமிட்டு சென்றது. முதலில் யானை முகத்துடன் கூடிய கஜமுக சூரன் போரிட்டான். சுவாமி ஜெயந்திநாதர் தனது வெற்றி வேலால் சரியாக மாலை …. மணிக்கு வீழத்தினார் அடுத்ததாக சிங்கமுகமாக மாறி போரிட்ட சூரனை முருகபெருமான் தனது வேலால் மாலை …. மணிக்கு சாய்ந்தார்.

தொடர்ந்து சூரன் தனது சுயரூபமான சூரபத்மனாக உருவெடுத்து முருகபெருமானுடன் போர் புரிந்தான். செந்திலாண்டவர் தனது வெற்றிவேலால் மாலை சரியாக… மணிக்கு வதம் செய்தார். பின்னர் சேவலாக மாமரமாகவும் போர் புரிந்த சூரனை கருணை கடவுளான ஜெயந்திநாதர் தனக்க ஆட்கொண்டார். லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி கோஷம் விண்ணை பிளந்தது. சம்ஹார முடிந்ததும் விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.

இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு மகாதீபாராதனை நடந்தது. அங்கிருந்து சுவாமி ஜெயந்திநாதர் பூச்சப்பரத்தில் கோயிலை சென்றடைந்தார். அங்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர் முன்பு கண்ணாடி வைக்கப்பட்டு பிம்பத்திற்கு அபிஷேகம் செய்யும் சாயாபிஷேகம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சஷ்டியின் 7ம் நாளான நாளை (3ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள முருகமண்டபத்தை சேருகிறார். பிற்பகலில் சுவாமி குமரவிடங்கபெருமான் தபசு காட்சிக்கு புறப்பட்டு அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறார். தெற்கு ரதவீதி சந்திப்பில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here