ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து மே,2ல் அமைச்சரவை கூடி முடிவு !

0
59
edappadi pazanichami

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பதா அல்லது தளர்த்துவதால் என்பது குறித்து முடிவு செய்ய தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் இரண்டாம் தேதி நடக்க உள்ளது.

தமிழகத்தில் வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய ஏப்ரல் 11-இல் முதல்வர் ஈபிஎஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் ஊர் இலங்கை நீட்டிக்க முடிவானது. இந்த நிலையில் ஏப்ரல் 15 முதல் மே 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு மத்தியஅரசு நீடித்தது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பெரும்பாலான மாவட்டங்களில் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை உட்பட பெரு நகரங்களில் மட்டும் நோய் பரவல் தொடர்கிறது.

எனவே மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே நேரம் நோய் தொற்று இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தொற்று நோய் பரவல் உள்ள பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் கொரோனா தடுப்பை கண்காணிக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களில் இடம்பெற்றுள்ள ஐஏ எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர் உடன் முதல்வர் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை செய்தார். அப்போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்வதற்காக வரும் இரண்டாம் தேதி மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here