ஜூலை இறுதியில் செமஸ்டர் தேர்வு – யுஜிசி தகவல்

0
194
ugc news

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

இதனிடையே முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு இன்றி இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேட் வழங்கலாம் என்றும், யுஜிசி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்த உத்தரவு மே 3-ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக் கழக தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன.

இதனால் மாணவர்களும் எப்போது தேர்வு நடைபெறும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து பல்கலைக்கழக மானியக்குழு குஹாத் என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரை அடிப்படையில் அவை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஜூலை 1 முதல் 31ம் தேதி வரையில் நடப்பு கல்வியாண்டிற்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தலாம். வாரத்திற்கு ஆறு நாட்கள் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தலாம். மே 15 முதல் ஆன்லைனில் பிராஜக்ட் வைவா உள்ளிட்ட மதிப்பீட்டை நடத்திக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதனால் மாணவர்கள் குழப்பம் அடையாமல் தேர்வுக்கு தயாராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தெளிவின்றி இன்டர்ணல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேட் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here