தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தினருக்கு சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர சூரணம் வழங்கல் !

0
52
thoothukudi sidha

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தினருக்கு சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர சூரணம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க மருத்துவ துறையை சார்ந்தவர்கள் நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் லட்சுமிகாந்த், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜசெல்வி, சித்தா உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கரராம சுப்பிரமணியன், ஆகியோரிடம் மருத்துவமனை சித்தா அலுவலகத்தில் கபசுர சூரணத்தை பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து, மன்ற உறுப்பினர்கள் சிதம்பரம், ராமலட்சுமணன், ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் மன்ற அலுவலகம் முன்பு மன்ற தலைவர் சண்முகசுந்தரம் செயலாளர் பிரபாகரன், உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள். இதில் கௌரவ ஆலோசகர் அருண், உள்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here