தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அட்மிட் ஆன 27 பேரில் 25 பேர் இதுவரை சிகிச்சைபெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்தநிலையில் இன்று பசுவந்தனையை சேர்ந்த வேலம்மாள் என்கிற பெண்ணும் இன்று வீடுதிரும்பினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி, மருத்துவர்கள் ஆகியோர் பழகூடை கொடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிட தக்கது.