கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் கிராமத்தில் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து 35 பேர் 2 கார் மற்றும் வேனில் வந்துள்ளனர். மேலக்கரந்தை உள்ள சோதனைச் சாவடி அருகே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவர்களுக்கு காய்ச்சல் சளி அறிகுறிகள் இருக்கிறதா என்று சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அனைவரும் தூத்துக்குடி உள்ள கொரோனா சிறப்பு வார்டு பகுதியில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.