திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் சூரசம்ஹாரம் விழாவில் ஏற்பாடுகள் என்ன ?

0
61
ticr news
 • சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்தும் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 • நகரில் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊருக்கு வெளியே நிறுத்தப்பட்டன. தூத்தக்குடி மார்க்கமாக வந்த வாகனங்கள் ஜெ.ஜெ.நகரிம், திருநெல்வேலி மார்க்கமாக வந்த வாகனங்கள் இசக்கியம்மன் கோயில் அருகிலும், பரமன்குறிச்சி மார்க்கமாக வந்த வாகனங்கள் நுகர்பொருள் வாணிபக்கழகம அருகிலும், கன்னியாகுமரி மார்க்கமாக வரும் வாகனங்கள் இசக்கியம்மன் கோயில் அருகிலும் நிறுத்தப்பட்டன.
 • நகரில் 20 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தமிடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து திருச்செந்தூர் கோயில வாசல் வரை கட்டணாமில்லா வேன்கள் 40 இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் பெரிதும் பயனடைந்தனர். இந்த புதிய முயற்சி இந்த முறை தான் அறிமுகப்படுத்ப்பட்டது.
 • நகரின் பிரதான வீதிகளில் திசையெங்கும் போலீசாரும், போலீஸ் வாகனங்களும் காணப்பட்டன. இதுவரை இல்லாத வகையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
 • சூரசம்ஹார நிகழ்ச்சி காண பக்தர்களுக்கு வாகனங்களுக்கு பஸ் வழங்குவது மிகவும் குறைக்கப்பட்டது. ஒரே மாதிரியாக பார் கோடுடன் மெரூன் காலர் பாஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் கோயில் வளாகத்தில் வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடவசதி செய்யப்பட்டிருந்தது. அதே போல் நகரில் போக்குவரத்து ஒரு வழிப்பாதை அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் போக்குவரத்து நெருக்கடியில் பக்தர்கள் சிக்கி தவித்தனர்.
 • *சம்ஹார நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்கு முன்பாக திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நேற்று எப்போதும் இல்லாத வகையில் போலீசார் சுவாமியை சுற்றி நின்றதால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
 • சஷ்டி துவங்கியது முதல் மூலவருக்கு அபிஷேக கட்டணமாக ரூ.3 ஆயிரமும், யாகசாலை நுழைவு கட்டணம் ரூ.3 ஆயரம் பக்தர்களிடம் பெறப்பட்டது சாதாரண எளிய பக்தர்களிடைய குமுறலை ஏற்படுத்தியது.
 • *விடுதிகள் சீல் வைக்கப்பட்டிருந்ததால் 9 தற்காலிக தகர செட்டுகள் அமைக்கப்பட்டன. முதல் இரு நாட்கள் மழை வெளுத்து வாங்கியதால் பக்தர்கள் தங்க முடியாமல் பரிதவித்தனர்.
 • *பக்தர்களின் வசதிக்காக பிரதான இடங்களில் ஆண்கள், பெண்களுக்கு மொத்தமாக 233 கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. ஆனால் பக்தர்கள் அடிப்படை தேவைகளுக்கு சிரமப்பட்டனர்.
 • திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நகரிலிருந்து 300 பஸ்கள இயக்கப்பட்டன.
 • சஷ்டியின் முக்கிய நாளான நகரில் அனேக இடங்களில் பக்தர்களுக்கு தாராளமாக அன்னதானம் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here