தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என அமைச்சரவை முடிவு

0
58
tamil nadu

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டநிலையில் மேலும் இரண்டு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என மத்தியரசு அறிவித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தன்னுடைய நிலைபாட்டை இன்று முடிவு செய்யும் என அறிவித்திருத்திருந்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. மத்தியரசு அறிவித்தபடி தமிழக அரசு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறது.

இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிகப்பு மண்டத்தில் இருப்போருக்கு அப்படியே முழுவதுமான விதிமுறையின் படி ஊரடங்கு தொடருகிறது. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலத்தில் உள்ளோருக்கு சலுகைகள் வெளியிடப்படும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here