வெளிமாவட்டத்தினர் நுழைந்துவிடாதபடி கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்

0
365
thoothukudi collector

தூத்துக்குடி மாவட்டத்துக்குள் வெளி மாவட்டத்தை சார்ந்தவர்கள் அனுமதி இன்றி உள்ளே நுழைந்துவிடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லைகளான எட்டயபுரம், வேம்பர், கோவில்பட்டி பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்துரி தெரிவித்தார்.

மாவட்ட எல்லை பகுதிகளான எட்டயபுரம், கோவில்பட்டி பகுதிகளில் கண்காணிக்கும் நடவடிக்கைகளை பார்வையிட்ட ஆட்சித் தலைவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ’’தூத்துக்குடி மாவட்டத்தில் 27 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழு பகுதிகள்: கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. 28 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் செய்துங்கநல்லூர், காயல்பட்டிணம், கேம்ப்லாபாத் ஆகிய மூன்று பகுதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று மட்டும் 500 பேர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.இதில் 55பேர் அனுமதியின்றி வந்துள்ளார்கள். இது போன்று அனுமதியின்றி வருவதை கண்காணிப்பதற்காக மாவட்ட எல்கைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் மாவட்ட எல்லையில் சோதனை மேற்கொள்ளப்படும், நோய் அறிகுறி தெரிந்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதியின்றி வந்தால் அவர்கள் எல்லை பகுதிகளான எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் வேம்பார் பகுதிகளில் தனிமைப்படுத்த படுவார்கள். மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் அவசியம் ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் வ.உ.சி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 8700 பேர் வெளி மாநில மற்றும் மாவட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.இவர்களுக்கு தேவையான உணவு தேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது ஊருக்கு செல்ல விருப்பம் இருப்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும் கிராமங்களில் நோய் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தகுந்த பாஸ் வைத்திருந்தாலும் அவர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்படும், இவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்’’ என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here