’’பாஜகவும் ரஜினியும் தமிழகத்துக்குள் ஆட்சிக்கு வரவே முடியாது’’ -அமைச்சர் செல்லூர்ராஜ் திட்டவட்டம் !

0
88
news

’’பாஜகவும் ரஜினியும் தமிழகத்துக்குள் ஆட்சிக்கு வரவே முடியாது’’ என்று தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில்கள் நிகழ்ச்சியில் ஹரியின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது என்கிறீங்க, அப்படி இருக்கும்போது, இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக சார்பில் யாருமே வரவில்லையே என்கிற கேள்விக்கு அந்த கட்சிக்கும் மாநில தலைவர் இல்லை என்பதால் அவர்கள் பிரசாரத்துக்கு வரவில்லை என்றார்.

தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடுவே, ‘எந்த சூழ்நிலையிலும் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்புக்கு வரவே முடியாது’ என்றார் அமைச்சர். ‘அப்போ ரஜினிகாந்த் ?’ என்று கேட்டதற்கு, ‘அவராலும் தமிழ்நாட்டில் ஒன்றும்செய்ய முடியாது. சினிமாவிலிருந்து வந்த புரட்சித்தலைவரும் புரட்சி தலைவியும் மட்டுமே மக்களால் ஏற்கப்பட்டவர்கள். வேறு யாரையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்’’ என்றார் அமைச்சர் செல்லூர் ராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here