நாசரேத்-வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய 7௦-வது பிரதிஷ்டை விழா!

0
133
nazareth news

நாசரேத்,நவ.04:வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய 70௦-வது பிரதிஷ்டை விழா ஆறு நாள்கள் நடந்தது.

  நாசரேத் அருகில் உள்ள வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான் களின் ஆலய 70௦-வது பிரதிஷ்டை பண்டிகை விழாவினை முன்னிட்டு முதல்நாள் ஞாயிறுகிழமை இரவு ஆராதனைமுடிந்ததும் ஊரைச் சுற்றி ஜெபபவனி சபைஊழியர் ஜாண்வில்சன் தலைமையில் நடந்தது. இதில் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இரண்டாவது நாள் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்கள் கனவென்ஷன்கூட்டங்கள்நடைபெற்றது.இதில்முதல்நாள் நடை பெற்றகூட்டத்தில் பழனியப்பபுரம் இரட்சணியப்பேழை ஊழிய நிறுவனர் பால்ராஜ் ஜேசுதாஸ்,இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மூக்குபீறி இயேசுவின் வல்லமை ஊழிய நிறுவனர் சகோ தரி புஷ்பா ராஜன் மூன்றாவது நாள் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத் தில் பிரகாசபுரம் இயேசு பிரகாசிக்கிறார் ஊழிய நிறுவனர் போத்திக்கண் ரவி ஆகியோர் தேவசெய்தி கொடுத்தனர்.

5-வது நாள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாலர் பண்டிகை யும், இரவு 7 மணிக்கு பண்டிகை ஆயத்த ஆராதனையும் மூக்குப்பீறி சேகரகுரு ஜெரேமியா தலைமையில் நடந்தது. உதவிகுரு கிங்ஸ்லி ஜாண்,சபை ஊழியர் ஜாண் வில்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
        6-வது நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பண்டிகை ஆராதனையும், பரி நற்கருணை ஆராதனையும் சேகரகுரு ஜெரேமியா தலைமையில் நடந்தது.உதவிகுரு க.கிங்ஸ்லி ஜாண் அருட் செய்தி வழங்கினார்.ஆராதனை முடிந்ததும் அசன பணிக்கான ஆயத்த ஜெபம் நடந்தது.மாலை 5 மணிக்கு அசன விருந்து பரிமாறப்பட்டது. இரவு 7 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை  நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை சேகரகுரு ஜெரேமியா தலைமையில் உதவி குரு கிங்ஸ்லிஜாண்,சபைஊழியர் ஜாண்வில்சன் ஆகியோர் முன்னிலை யில் ஆலய பரிபாலனக்கமிட்டி தலைவர் சிம்சோன்,உப தலைவர் தின கரன் ஜோசப்,செயலாளர் நிக்சன்,துணைசெயலாளர் சுந்தர், பொருளாளர் பொன்ராஜ் மற்றும் கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here