தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினருக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள்

0
9
photo

தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் திருமணம், திருவிழா உள்ளிட்ட அனைத்து சுபநிகழ்ச்சிகளும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இதனை நம்பி வாழ்ந்துவந்த போட்டோ, வீடியோ தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திலுள்ள போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள், ஒளிப்பதிவாளர்களான சங்க உறுப்பினர்களுக்கு காய்கறிகள், கோழிமுட்டை, முககவசம், கைகழுவும் கிருமிநாசினி போன்றவை முதல்கட்டமாக ஏற்கனவே வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள 80க்கும் மேற்பட்ட தொழிற்கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜாசாலமோன் தலைமையில், மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் குணசேகர், செய்தி தொடர்பு அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் வழங்கினர்.

புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஸ்டூடியோ உரிமையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களை நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

நிவாரண உதவியானது சங்க செயலாளர் ராஜாசாலமோன் சொந்த செலவிலும், டி.சி.டபிள்யூ நிறுவனம், எஸ்.டி.ஆர்.பொன் சீலன், நெல்லை தொழிலதிபர், தூத்துக்குடி வெல்கம் வீடியோ வேலு, சப்&இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் உள்ளிட்டவர்களின் ஏற்பாட்டின்பேரிலும் வழங்கப்பட்டது.

இதுபோன்று, சாத்தான்குளம் வட்டார சங்கத்தினர் வட்டார உறுப்பினர்களுக்கு மளிகைபொருட்களை வழங்கினர். மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் மூலமாக ஸ்டூடியோ உரிமையாளர்கள், போட்டோகிராபர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்க செயலாளர் ராஜாசாலமோன் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவால் திருமணம், சடங்கு போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று வீடியோ போட்டோ எடுத்து தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த சங்க கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சங்கத்தின் மூலமாக நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளோம்.

இதற்காக எங்களுக்கு உறுதுணையாக இருந்த டி.சி.டபிள்யூ நிறுவனம், தூத்துக்குடி அபி குரூப்ஸ் நிறுவனர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், வெல்கம் வீடியோ உரிமையாளர் வேலு, நெல்லை போட்டோ பார்க் உரிமையாளர் மெல்கி, மகாராஜா மசாலா உரிமையாளர் பாஸ்கர் உள்ளிட்ட உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here