நாசரேத் பொறியியல் கல்லூரியில் கொரோனா நலத்திட்ட உதவிகள்!

0
99
nazareth

நாசரேத், மே.05:நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில்தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பேராயர் மற்றும் கல்லூரி தலைவர் அறிவர் எஸ்.இ.சி. தேவசகாயம் ஆலோசனைப்படி கொரோனா வைரஸ் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மாணவ, மாணவியரின் பெற்றோர், தூய்மை பணியாளர்கள், மற்றும் ஓட்டுநர்களுக்கு நிவாரண உதவி வழங்குதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி;க்கு கல்லூரியின் தாளாளர் பொறியாளர் ஏ.ஆர். சசிகரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் காவல் துறை உதவி கண்காணிப்பாளர் பிரதாபன், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, மார்த்தாண்டம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் முனைவர் மேரி ரத்னா, சென்னை வருமான வரித்துறை ஆய்வாளர் சரணவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத்தலைவர்கள் ஜெனிபர் ஜாண், எபனேசர் டேனியல், முனைவர் ஆக்னஸ் பிரேமா மேரி மற்றும் உடற் கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொணடனர். நிவாரண உதவி பொருட்களை சாத்தான் குளம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பயனாளி களுக்கு வழங்கினார்.

மேலும் சுமார் 200 ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோருக்கும் அவரவர் இருப்பிடத்திற்கே கல்லூரி வாகனம் மூலம் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் நிவாரண பொருட்கள் கொண்டு வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. நாட்டு நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். ஞான செல்வன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர் கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here