’’எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’’ – பெண்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு

0
72
sterlite news

தூத்துக்குடி நவ 4

தூத்துக்குடியிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொழிற்பயிற்சி வழங்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என இன்று(04.11.2019)பெண்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் மாசு ஏற்படுவதாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. அதில் நடந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இந்த ஆலை மூடப்பட்டதால் நிரந்தம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை மக்கள் பலமுறை மாவட்ட கலெக்டரிடமும் அரசின் பிற துறையினரிடமும் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆலை மூடப்பட்டதற்காக எதிராக ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது எங்களுக்கு தையல் பயிற்சி,காளான் வளர்ப்பு பயிற்சி,தேனி வளர்ப்பு,துணி பை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து வந்தனர். இந்த ஆலை மூடப்பட்டதால் எங்களுக்கு அளித்துவந்த தொழில் பயிற்சியை நிறுத்திவிட்டார்கள் எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செல்சீனி காலனி,கால்டுவெல்காலனி,பண்டாரம்பட்டி, சத்யாநகர்,அய்யனடைப்பு,சங்கரப்பேரி ஆகிய கிராமங்களை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here