’’யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது’’ – அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

0
116
kadambur raju

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த பேரிடர் மேலாண்மை மீட்பு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வருவாய் அதிகாரி விஷ்ணு சந்திரன், காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

இதனை தொடர்ந்து அவர் பேட்டி அளிக்கையில், இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பிலிருந்து வேகமாக குணம் பெறுகிற மாநிலம் தமிழகம் தான். தமிழக அரசின் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

கொரோனாவுக்கு ஒரே மருந்து மக்கள் சுய கட்டுப்பாடுடன் இருப்பதுதான். எந்த வகையான மக்களும் பாதிக்கப்படகூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்துக்கான அரிசி உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக மக்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அல்லாத அமைப்புசாரா தொழிலாளர்கள் 96 ஆயிரத்து 963 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 19,544 மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணமாக 5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல வெளி மாநில தொழிலாளர்கள் 3700 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருகிறவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 600 படுக்கை வசதியுடன் தயார் நிலையில் முகாம்கள் உள்ளது.

திரைத்துறையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ், எடிட்டிங்,டப்பிங் பணிகளுக்கும், சின்னத்திரை வீட்டுக்குள் நடைபெறும் படப்படிப்புக்கும் அனுமதி வழங்குவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்’’ என்றார் அமைச்சர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here