நாசரேத் அருகே உடையார்குளத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு – மாமனார், மருமகன் கொலை ! – 3 பேர் கைது

0
114
nazareth murder

நாசரேத், மே.09:தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள உடையார் குளம் பகுதியை சேர்ந்த பலவேசம் என்பவர் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் பணத்தை மீண்டும் கொடுத்து விட்டு வீட்டுப் பத்தி ரத்தை கேட்டபோது வீட்டு பத்திரம் திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபம டைந்த பலவேசம் முத்துராஜின் தம்பி சண்முகசுந்தரத்திடம் போனில் தொடர்பு கொண்டு தனது பத்திரத்தை தர வேண்டும் என கேட்டுள்ளார்.இதில் முத்துராஜ் தம்பி சண்முகசுந்தரத்திற்கும் கடன் வாங்கிய பலவேசத்திற்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது முற்றி கடந்த 07.05.2020 அன்று சண்முக சுந்தரம், பலவேசத்தை தாக்கியுள் ளார்.

இதில் காயமடைந்த பலவேசம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார் இதன் பெயரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சண்முகசுந்தரத்தின் அண்ணன் கடன் கொடுத்த முத்துராஜ் என்ப வர் தனது தம்பியை காவல்துறை யில் மாட்டிவிட்டு சிறைக்கு அனுப்பி விட்டாரே என்ற கோபத்தில் நேற்று முத்துராஜ் ஆறு பேருடன் பலவேசம் வீட்டிற்கு வந்து தாக்கியதில் பலவே சம் சம்பவ இடத்திலேயே உயிரிழந் துள்ளார்.தடுக்கவந்த அவரது மரும கன் தங்கராஜ் அந்த இடத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பலவேசம் கொலைசெய்யப்பட்டு இறந்த பலவேசம் தங்கராஜ் ஆகியோர் மாமனாரும் மருமகனும் ஆவார் இவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் கொலை செய்ததாக கூறப்படும் முத்துராஜ் என்பவர் மற்றொரு சமூகம் என்பதால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் கொலை கொள்ளைகள் இல்லாமல் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடந்துள்ளது தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கேள்விப்பட்டதும் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்கு மார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன், சாத்தான் குளம் டி.எஸ்.பி. பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இரண்டு தரப்பினருக்குமிடையே மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டது. இது குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ், செல்லத்துரை, பாரதி ஆகிய 3 பேரை கைது செய் தனர். ஞானசுந்தர், செந்தில், மூத்த துக்குமார் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நாசரேத் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடைபெற நாசரேத் காவல் நிலையத்திலுள்ள காவலர்களே காரணம் என பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here