’’புதிய பேருந்து நிலைய இடத்தில் பேருந்து பணிமனை அமைக்க கூடாது’’ – கீதாஜீவன் எம்.எல்.ஏ கண்டிப்பு !

0
72
geetha jeevan

தூத்துக்குடி புதிய பேருந்துநிலைய இடத்தில் பேருந்து பணி மனை அமைக்க கூடாது என்று தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். அது குறித்து இன்று (05.11.2019)தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனை சந்தித்து அவர் மனு கொடுத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து பெற்றதையொட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பழைய பேருந்து நிலையத்தை அகற்றி விட்டு அதன் அருகே இருக்கும் பேருந்து பணி மனையையும் இணைத்து புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே அகற்றபடும் பேருந்து பணிமனை புதிய பேருந்துநிலையம் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், ‘’தூத்துக்குடி மாநகராட்சியின் மையப்பகுதியில் இயங்கி வரும் புதிய பேருந்து நிலைய இடத்தை போக்குவரத்துகழக பணி மனைக்கு வழங்கிட தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலையை ஏபடுத்தும். ஏற்கன்பவே வெளியூரிலிருந்து வரகூடிய பேருந்துகள் பயணிகளை புதிய பேருந்துநிலையம் உள்ளே சென்று இறக்கிவிடாமல் மேம்பாலத்துக்கு அருகில் இறக்கிவிட்டு செல்கின்றன.

இதனால் பயணிகள் சாலையை கடந்து செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது. அதன் மூலம் விபத்துக்கள் நடந்து வருகின்றன. எனவே அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்துக்கு உள்ளே சென்று இறக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கேடிசி பணிமனையை இடவசதியை காரணம் காட்டி புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றுவது சரியான தீர்வல்ல. எதிர்காலத்தில் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் பொழுது மீண்டும் பேருந்து பணிமனை மாற்றம் செய்யப்பட வேண்டியிருக்கும்.

இதில் தொலை நோக்கு பார்வையோடு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே கேடிசி பணிமனை மாநகராட்சி 2-வது வார்டில் ரஹ்மத்நகரில் செயல்பட்டு வருகிறது. அதில் காலி இடங்கள் அதிகம் இருக்கிறது. அதேபோல் புறநகர் பகுதியில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட மாநகராட்சி குப்பை கிடங்குப் பகுதியில் வழங்கலாம்.

மேலும் தூத்துக்குடி நகரத்திலிருந்து சுமார் 120 தனியார் பேருந்துகள் தினசரி சென்னைக்கு செல்கிறது. அந்த பேருந்துகள் எல்லாம் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி மக்களை ஏற்றுகிறார்கள். புதிய பேருந்து நிலைய இடத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்திட புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ் நிலையம் அமைத்து மக்கள் நலனுக்கு உதவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு வருமானம் வரும்.

ஆகவே மாநகராட்சி நிர்வாகம் பழைய பேருந்து நிலையத்தில் அமைய பெற்றுள்ள கேடிசி பணிமனைக்கு புதிய பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய பேருந்துநிலையத்தில் தனியார் பேருந்துகளுக்கான நிறுத்தம் அமைத்திட அனுமதி அளிக்க வேண்டும்.

பொதுமக்களின் இந்த கோரிக்கையை கருதாத பட்சத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here