ஸ்ரீவைகுண்டம் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் – அமமுக ஏற்பாடு

0
13
amumuka

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை அமமுக மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் வழங்கினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்திலுள்ள தூய்மை பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வக்கீல் சங்கரலிங்கம், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வழக்கறிஞர் புவனேஸ்வரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

இதில், ஸ்ரீவைகுண்டம் நகர பொறுப்பாளர்கள் சிவராமலிங்கம், கருப்பசாமி, செங்கோட்டைமாரியப்பன், முருகன், பகவான் முத்துபாண்டி, கொம்பையா, வார்டு செயலாளர் முருகன், பெருங்குளம் நகர செயலாளர் சுடலை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஆழ்வார்தோப்பில் நலிவடைந்த நிலையிலுள்ள 150குடும்பத்தினருக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வழக்கறிஞர் புவனேஸ்வரன் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here