நல்லூர், மேலப்புதுக்குடி பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பொருள் வழங்கல்!

0
32
nazareth

நாசரேத், மே.08:நல்லூர்,மேலப்புதுக்குடி,வீரமாணிக்கம் போன்ற பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனா தடை காலத்திலும் தங்களது பணியை தொடர்ந்து செய்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு, அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பலர் நிவாரண உதவியாக உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். இதேபோல் திருச்செந்தூர் யூனியன் 1-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ராமலெட்சுமி வடிவேல் நல்லூர், வீரமாணிக்கம், மேலப்புதுக்குடி, பள்ளிபத்து ஆகிய பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி போன்ற உணவு பொருட்களை வழங்கினார்.

இதேபோல் நல்லூர் பஞ்சாயத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பஞ் சாயத்து தலைவர் சித்ராபரிசமுத்து,துணைத்தலைவர் பரிசமுத்து ஆகியோர் உணவு பொருட்களை வழங்கினர்.இதில் நல்லூர்வடிவேல் உட்படபலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here