தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கடந்த 4ம்தேதி அங்கிருந்து லாரி மூலமாக அவர் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இந்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள், அவரை தனிமைப்படுத்திய சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அதற்கான ரிசல்ட்ர் வந்திருக்கிறது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி என அறியப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.