தினசரி 200 பேருக்கு மதிய உணவு – விளம்பரம் இல்லாமல் வழங்கி வருகிறார் கனிமொழி !

0
25
dmk news kanimozhi

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து 200 பேர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார் தூத்துக்குடி எம்.பியான கனிமொழி.

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகில் சரியாக மதியம் ஒரு மணிக்கு தி.மு.க உள்ளூர் நிர்வாகிகள் சிலர் வருகிறார்கள். அவர்களை கண்டவுடன் அந்த பகுதியில் உணவுக்காக காத்திருக்கும் பலர் வரிசையாக நிற்க தொடங்கிவிடுகிறார்கள். அதிலிருந்து ஒரு சில நிமிடத்தில் சாப்பாட்டு பொட்டலங்களுடன் கார் ஒன்று வருகிறது.

ஏற்கனவே பழக்கப்பட்டுவிட்டதால், எந்த முண்டியடித்தலும் இல்லாமல் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக வரிசையில் நிற்க காருக்குள் இருந்து சாப்பாட்டு பொட்டலங்களை எடுத்து வரிசையில் நிற்போரிடம் கொடுக்கிறார்கள். சில நிமிடங்களில் அத்தனைபேருக்கும் சாப்பாட்டு பொட்டலம் கிடைக்கிறது. அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பாடு பொட்டலத்தை வாங்கியோர் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட சென்றுவிடுகிறார்கள்.

சாப்பாடு விநியோத்தவரிடம் விசாரித்தோம். தி.மு.கவை சேர்ந்த பேச்சுமுத்து(தொ.மு.ச), தூத்துக்குடி மாநகர பிரதிநிதி லிங்கராஜா ஆகியோர் நம்மிடம் பேசினர். ‘’தூத்துக்குடி தொகுதி எம்.பியான அக்கா கனிமொழி ஏற்பாட்டில் இந்த சாப்பாடு வழங்குதல் நடந்து வருகிறது. ஊரடங்கு அறிவித்ததிலிருந்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக நாங்க இதை செய்து வருகிறோம். தினசரி 200 சாப்பாடு தயார் செய்து முதலில் ராஜாஜி பூங்கா அருகில் கொண் டு வருவோம். எங்களை எதிர் பார்த்து இங்கே நிறைய பேர் காத்திருப்பார்கள்.

அவர்களிடம் கொடுப்போம். அதன் பிறகு மாநகர் பகுதியில் உணவுக்காக காத்திருக்கும் ஆதரவற்றோரை தேடி கொண்டுப்போய் கொடுப்போம். இது தினசரி நடந்து வருகிறது. இதை எம்.பி அவரகள் எந்த விளம்பரமும் இல்லாமல் செய்து வருகிறார்கள். பலரின் பசியை போக்குகிறோம் என்பதை பார்க்கும் போது எங்கள் எல்லோருக்கும் பெருமையாக இருக்கிறது’’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here