நாசரேத் தூய யோவான் பேராலய 92-வது அசனப்பண்டிகை ஆராதனை!

0
29
nazareth news

நாசரேத்,மே.11:நாசரேத் தூய யோவான்பேராலய 92-வதுஅசனப்பண்டிகை ஆராதனை சமூக வலைத்தளங்களிலும்,உள்ளூர் தொலைக்காட்சிசேனல்களிலும் ஒளிபரப்பானது. நாசரேத் மக்கள் வீடுகளில் இருந்தவாறு கண்டு களித்து பிரார்த்தனை செய்தனர்.

கொரோனா கால ஊரடங்கால் ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளதால் ஆராதனைகள் நடைபெறுவதில்லை.இதனால் ஆலயத்தில் நடைபெறும் சமூகவிலகலை கடைப்பிடிக் கும் விதமாக விஷேசங்கள் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் பல நிகழ்வு களை நடத்தாமல் தவிர்க்கப்பட்டது.நாசரேத் தூய யோவான் பேராலய 92-வது அச னப்பண்டிகைஆராதனை சமூகவலைத்தளங்களிலும்,உள்ளூர்தொலைக்காட்சி சேனல் களிலும்ஒளிபரப்பானது.இதனைநாசரேத்மக்கள் வீடுகளில்இருந்தவாறு கண்டு களித்து பிரார்த்தனைசெய்தனர்.

இந்தஆராதனையில் உதவிகுருவானவர் இஸ்ரவேல் ஞானராஜ் அருளுரை ஆற்றினார். தலைமைப் பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து ஆராதனையை நடத்தினார்.உதவி குருவானவர் ரொனால்டு பாஸ்கரன்,சபை ஊழியர் கள் ஜெபசிங் தங்கபாண்டி, ஜெபராஜ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அசனப்பண்டிகையை முன்னிட்டு திருமறையூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப் பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமையில் உதவி குருவானவர்கள் இஸ்ரவேல் ஞானராஜ், ரொனால்டு பாஸ்கரன், சபை ஊழியர்கள் ஜெபசிங் தங்கபாண்டி,ஜெபராஜ் சாமுவேல் மற்றும் சேகர செயலாளர் எலியேசர், பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ்,கமிட்டி அங்கத்தினர்கள்,அசனகமிட்டி தலைவர் செல்வின், பொருளாளர் ஆர்.லேவி அசோக் சுந்தர்ராஜ், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here