நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல்!

0
31
nalumavadi news

நாசரேத்,மே.11:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் சேதுக்குவாய்த் தான் ஊராட்சியில் ஏழைகளுக்கு உணவு பொருள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் வருமானம் இன்றி உணவு பொருட்கள் வாங்க வழியின்றி தவித்து வருபவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் நிவாரணமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சேதுக்குவாய்த்தான் பஞசாயத்து தலைவர் சுதா சீனிவாசன் தங்களது பகுதியில் உள்ள ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாரசஸ் சேதுக்குவாய்த்தான் பகுதி மக்கள் 100 பேருக்கு அரிசி,பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை வழங்க ஏற்பாடுசெய்தார்.இதனைத்தொடர்ந்து சேதுக்குவாய்த் தான் பஞ்சாயத்து சமுதாயநலக்கூடத்தில் ஏழைகளுக்கு உணவு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பஞ்சாயத்து தலைவர் சுதாசீனிவாசன் தலைமைவகித்தார்.துணைத் தலைவர் வைகைக்கரையான் முன்னிலை வகித்தார்.

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பொதுமக்களுக்கு உணவுபொருள்களை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் ரகுராமன்,பஞ்சாயத்து செயலர் மாரிராஜ்,ஜமாத் தலைவர் வசூர்,கவுன்சிலர்கள் மற்றும் வக்கீல் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here