மும்பையிலிருந்து வந்த 6 பேரில் 2 பேருக்கு கொரோனா – தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் அனுமதி

0
81
kovilpatti corona

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் ஆத்திகுளத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மும்பையில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த 8ம் தேதி அந்த குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சொந்த காரில் ஊருக்கு கிளம்பினர். 10ஆம் தேதி ஊருக்கு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் 6பேரையும் தனிமைப்படுத்தி, சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 58 வயதான கணவன் மற்றும் 53 வயதான மனைவி இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here