மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவல் – கேங்மேன் பணிக்காக விரைவில் 5000 பேர் நியமனம் – அமைச்சர் தங்கமணி

0
113
minister news

கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, எம்.எல்.ஏக்கள் சண்முகநாதன், சின்னப்பன் மற்றும் அதிமுகவினர் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 93அடியில் அமையுள்ள முருகன் சிலை பணிகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அமைச்சர்கள் முன்னிலையில் திமுக, அமமுக கட்சிகளில் இருந்து பிரிந்து ஏராளமான தொண்டர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் மின்சாரத் துறையில் புதிதாக கேங்மேன் என்ற சொல்லக்கூடிய பணிக்காக 5000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.ஒரு மாத காலத்தில் அதற்கான பணிகள் முடிவடையும்.ஏற்கனவே விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.அதன் படி தகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியாக, அந்த பகுதியில் செயல்முறை தேர்வு என்று சொல்லக்கூடிய மின்கம்பம் நடுவது, கம்பத்தில் ஏறுவது, கம்பிகளை இழுத்துகட்டுவது போன்றவற்றை செய்து காண்பித்து தேர்ச்சி பெறுபவர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்,மின்சாரத் துறையில் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது அதற்கு ஏற்ப பணியாளர்களை நியமித்து வருகிறோம்,

ஏற்கனவே ஆண்டுதோறும் 5ஆயிரம் பணியாளர்கள் எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தப்படி தற்பொழுது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை,ஈரோடு பகுதியில் மின்சாரத் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் லயன் மேன், வயர்மேன் பதவிகளுக்கு 1000 பேர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வருகின்ற ஆண்டில் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவல்,தற்போது மழைக்காலம் என்பதாலும், கடந்த காலம் போன்று புயல் போன்றவைகள் வந்தால் அதனை சமாளிக்க 1லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தேவையான மின் உபகரணங்கள் தயாராக உள்ளன.பற்றாக்குறை என்று தகவல் கொடுத்தால் அங்கு அனுப்பி வைக்கும் பணியும் விரைந்து செய்ய தயாராக உள்ளோம்,எ ங்கேயும் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை,திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறார். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து தொகுப்பு தமிழக அரசு திரைப்பட பிரிவு சார்பில் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. முதல்வர் பார்வைக்கு பின் விரைவில் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும்,உள்ளாட்சி தேர்தலை கண்டு பயந்தது திமுக தான், அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை அறிவித்து வேட்பாளர்களை அறிவித்து , வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில், அதற்கு தடை வாங்கியவர்கள் திமுகவினர்,

தேர்தல் பயம் குறித்த கேள்வியை மு.க.ஸ்டாலின் இடம் தான் கேட்க வேண்டும் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here