கயத்தார் அருகே 6பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தடுப்பு பணிகள் தீவிரம்

0
59
kayathar corona 6

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டார பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரத்துறை முகாமிட்டு தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் 3-ம் கட்ட ஊரடங்கை பிறப்பித்து தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டதுடன் வெறி மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு புலம் பெயர்ந்து வருபவர்கள் தனிமை படுத்தப்படுகின்றனர். அதனால் கரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது. கயத்தாறு வட்டார பகுதிகளுனான ஆத்திகுளம், புதுக்கோட்டை , அகிலாண்டபுரம் ஆகிய கிராமத்திற்க்கு மும்பை பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்த வன்னம் உள்ளனர். கடந்த 11-ம் தேதி ஒரு குடும்பத்தினர் மற்றும் சிலர்சொந்த காரில் ஆத்திகுளம் வந்தனர்.

அவர்கள் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 13 -ம் தேதி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. 15-ம் தேதி 6 பேர்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் 45 வயதுடைய நபர், 39 வயதுடைய மனைவி, 19 வயதுடைய மகள், 15 வயதுடைய மகன் ஆகிய 4 பேர்க்கும், 63 வயதுடைய முதியவர்க்கும், 44 வயதுடைய பெண்ணுக்குமாக மொத்தம் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவ அலுவலர் திலகவதி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் பெரியசாமி, தாசில்தார் பாஸ்கரன், துணை தாசில்தார் திரவியம், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் இரண்டு 108 ஆம்புலன்ஸ்களில் 6 நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ரிசல்ட் வரும் போது கரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும். இதே பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் ,மனைவி ஆகிய இருவர்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆத்திகுளம் கிராமத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் ஸ்பிரே மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன் நோய் எதிர்ப்பு பொடிகள் போடப்பட்டு வருகிறது. கயத்தாறு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்க்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here