அங்கமங்கலம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் – சகோ.மோகன் சி. லாரசஸ் வழங்கினார் !

0
116
nalumavadi

நாசரேத்,மே.16:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் அங்கமங்கலம் ஊராட்சியில் 50 வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் வருமானம் இன்றி உணவு பொருட்கள் வாங்க வழியின்றி தவித்து வரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் நிவாரணமாக அரிசி, மளிகை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பல கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

அதில் ஒருகட்டமாக அங்கமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவல கத்தில்தலைவர் பானுப்பிரியாபாலமுருகன் தலைமையில் அங்கமங்கலம் ஊராட்சிக் குட்பட்டபகுதியிலுள்ள ஏழைக்குடும்பங்கள் 50 பேர்களுக்கு உணவுப் பொருட்களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாரசஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துசங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here