கோவில்பட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

0
86
puthiyatamilagam kovilpatti

கோவில்பட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் கொரானா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆணைக்கிணங்க கொரானா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சண்முகநகர் பஞ்சாயத்துக்குட்பட்ட சண்முகநகர், மேலகாலனி ,திட்டங்குளம் ஆகிய பகுதிகளில் கொரானா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் முதியோர் ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சண்முகநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக அணி குழந்தைவேலு தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் சாத்தையா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்.

இதில் புதிய தமிழகம் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் அன்புராஜ்,மாவட்ட இளைஞரணி கிரிபாலா ,கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ,மேற்கு ஒன்றிய செயலாளர் லாசர் ,ஒன்றிய விவசாய அணி செயலாளர் பேச்சிமுத்து ,முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவில்செல்வம் ,ஒன்றிய இளைஞரணி மகேந்திரன் தீத்தாம்பட்டி கிளை செயலாளர் அருண்குமார், மகளிர் அணி செயலாளர் வள்ளியம்மாள் ,கமலா ,மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here