புதுக்கோட்டை,டி.டி.டி.ஏ. பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்!

0
26
pudukottai school news

நாசரேத்,நவ.06:புதுக்கோட்டை,டி.டி.டி.ஏ. பி.எஸ்.பெரியநாயகம் மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 7 நாள்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, டி.டி.டி.ஏ.பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்,பாக்கிய லெட்சுமி நகரில் 7 நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளன்று தலை மை ஆசிரியை எம்.தவமணி தேவி வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் ஜெபராஜ் மைக்கேல், ஜான் சௌந்தரராஜ் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

திட்ட அலுவலர் எம்.ஏ.எல். தமிழ்செல்வன் நன்றி கூறினார். சிறப்பு முகாமில் மாணவகளுக்கு தேவையான உதவிகளை ஊர் இளை ஞர்கள் மற்றும் பாஸ்கர், இன்பராஜ்,முருகன் உள்ளிட்ட இளைஞர்கள் செய்து இருந்தனர். சிறப்பு முகாமில் தெருக்களில், சாலையில், பள்ளி வளாகத்தில் தூய்மை பணியை மாணவர்கள் செய்தனர்.

மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஓழிப்பு, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, குழந்தை தொழி லாளர் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றது.இலவச மருத்துவ முகாம், சட்ட விழிப்புணர்வு முகாம், நாணயங்கள் சேகரிப்பு, போதை தடுப்பு கருத்தருங்கு நிகழ்வுகளும் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here