ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் அஇஅதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், உதவி வருகிறார்.

அந்த வகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் மகிழ்ச்சிபுரம் பகுதியில் 500 குடும்பங்களுக்கும் 17, 18, 19, வார்டு பகுதிகளான மாணிக்கபுரம், தஸ்நேவிஸ் நகர், கலைஞர் நகர், லூர்தம்மாள் புரம், சென்மேரிஸ் காலனி, பொன் சுப்பையா நகர், சிவராஜபுரம், ஜீவா நகர், சங்குகுளி காலனி, சாமுவேல் புரம், பூபால ராயபுரம், முருகன் தியேட்டர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர்,கிழக்கு பகுதி செயலாளர் பி.சேவியர், மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன், மாவட்ட அம்மா பேரவை பி மூர்த்தி, அரசு வழக்கறிஞர் ராஜாராம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் சேவியர் ராஜ், கிழக்கு பகுதி துணை செயலாளர், அந்தோனியப்பா, மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் என் சிவ சுப்ரமணியன், வங்கி இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன், வேல்முருகன், திருமணி அம்மாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரா பொன்ராஜ், சந்திரா செல்லப்பா, வட்ட செயலாளர்கள் மனோகர், அன்பு லிங்கம்(வங்கி இயக்குனர்), பெருமாள்,
அம்பை முருகன், சுயம்பு, வட்ட செயலாளர் பொறுப்பாளர்கள் பாம்பு முருகன், வட்ட பிரதிநிதிகள் ஜெனோஃபர், மகராஜன், அருண்குமார், அய்யப்பன், முத்து, ஜே டி அம்மா, பிவிலோனம்மா, போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச்செயலாளர் பி சங்கர், நகர கிளை பொருளாளர் சண்முகராஜ், வார்டு நிர்வாகிகள் சுப்புராஜ், ஜோதிகா மாரி, நயினார், ஆறுமுக நயினார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, நடராஜன், கணேஷ், ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சாம் கௌதம், சிறுபான்மை பிரிவு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.