ஸ்ரீவெங்கடேஷ்புரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் வெட்டிக் கொலை – 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் !

0
87
crime

தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் ஊரை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ஜெயக்குமார்(37). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிவந்தார். மேலும், ஸ்ரீவெங்கடேஷபுரம் ஊராட்சி மன்றத்தில் 6-வது வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்த இவர், வீட்டில் சிறிய பெட்டிக்கடையும் நடத்தி வந்தார்.

இன்று இரவு 8 மணி அளவில் ஜெயக்குமார் பெட்டிக்கடையில் இருந்த போது, மூன்று பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த சாத்தான்குளம் போலீஸார், ஜெயக்குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்ய சாத்தான் குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார், கொலையாளிகளை தேடி வருகிறார்கள். எதற்காக கொலை சம்பவம் நடந்தது என இன்னும் தெரியவில்லை. ஏற்கனவே ஜெயக்குமாரின் ஆட்டோ தீவைக்கப்பட்ட சம்பவத்தில் பகை, ஆடு மேய்ச்சல் நிலத்தில் பகை என ஜெயக்குமாருக்கு பல பகை இருப்பதால் கொலைக்கான காரணம் எது என்று உடனே தெரியவில்லை என்கிறார்கள் காவல்த்துறையினர்.

இறந்துபோன ஜெயக்குமாருக்கு வசந்தா(32) என்கிற மனைவியும் ஒரு மகன் 2 மகள்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here