தூத்துக்குடியில் 2-ம் நிலை காவலர்கள், ஜெயில் வார்டன் களுக்கான உடல் தகுதி தேர்வு !

0
332
police news

ரயில்வே ஐ.ஜி ஏ. வனிதா, சூப்பர் செக் அதிகாரியாகவும் தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி N.ணு. ஆசியம்மாள், மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று (06.11.2019) தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தேர்வில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழு நடத்திய இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1850 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும் 752 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் மற்றும் விளையாட்டு ஒதுக்கீட்டில் 39 விண்ணப்பதாரர்களுக்கும் மொத்தம் 2641 விண்ணப்பதாரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1211 ஆண் விண்ணப்பதாரர்கள்களும், 446 பெண் விண்ணப்பதாரர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 639 ஆண் விண்ணப்பதாரர்களும், 306 பெண் விண்ணப்பதாரர்களும் விளையாட்டு ஒதுக்கீட்டின்படி 39 விண்ணப்பதாரர்களும் கலந்து கொள்கின்றனர்.

முதற்கட்டமாக உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல் மற்றும் ஓட்டம் போன்ற உடல் ஆற்றல் தேர்வு நடைபெறும், பின் இதில் தகுதி பெற்றவர்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் மற்றும் ஓட்டம் போன்ற உடல் திறனாய்வு தேர்வு நடைபெறும்.

இதற்கான பணிகளை தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here