தூத்துக்குடி கடல் பகுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மாயம்!

0
161
thoothukudi harbour

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள யூரியா ஏற்றி வந்துள்ள கப்பலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மற்றும் சிப்பந்திகள் 15 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 7 பேரும் பணியில் இருந்தனர்.

எகிப்து நாட்டின் அல் அடபியா துறைமுகத்தில் இருந்து யூரியா ஏற்றி வந்த சரக்கு கப்பலில் (gravity /0109) மாலுமி உட்பட 22 பேர் உள்ளனர்.

இந்த கப்பலில் வந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த கப்பல் மாலுமி Andriy starostin என்பவர் கடந்த 15-05-2020 அன்று இரவு நேரம் கடலில் காணாமல் போனதாக தகவல் சொல்லப்படுகிறது.

இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுக சரக்கு தளத்திற்கு வரும் 22-05-20 அன்று நிறுத்தப்படும் போது முறையாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் கப்பலின் மாலுமி அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளபடும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here