ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு 2-வது ஆண்டு நினைவு அஞ்சலி

0
128
sterlite news

தூத்துக்குடி யில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த அவர்களது குடும்பத்தாருக்கு மட்டுமே அனுமதி என மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் மே மாதம் 22 ந் தேதி, தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் பேரணியாக சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது, போராட்டம் வன்முறையானது, கூட்டத்தை கலைக்கவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையால் துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டது.அதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நாளை ( 22.5.2020) வெள்ளிக்கிழமை நடத்த ஸ்டெர்லைட் எதிர்பாளர்களால் திட்டமிடப்பட்டிருந்தது.அதற்காக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சார்பில் சமூக வலைதளங்கள் மூலம் நினைவுஅஞ்சலி செலுத்துவது தொடர்பான செய்திகள் பகிரப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் , காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், தூத்துக்குடியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் பொதுமக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் கட்சிகள் அமைப்புகள், வணிக அமைப்புகள் யாரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூடுதலாக வெளிமாவட்ட காவலர்களும் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டு ,பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here