ராமானுஜம்புதூர் பள்ளி மாணவர்களுக்கு ‘விதைப்பந்துகள்’ வழங்கும் விழா

0
470
srivaikundam

கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் ராமானுஜம்புதூர் பள்ளி மாணவ, மாணவியர்களிடத்தில் ‘மரம் வளர்ப்பதின் அவசியம்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில் ‘விதைப்பந்துகள்’ வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜனரஞ்சனி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத்துறை அலுவலர் சுவேகா வரவேற்றார்.

விழாவில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜனரஞ்சி பள்ளியின் 500மாணவ, மாணவியர்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றுள்ள வாழ்க்கைச் சூழலில் ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற முறையில் மாணவ, மாணவியர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மரம் வளர்க்கவேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் மரம் வளர்த்திட ஏதுவாகத்தான் இந்த விதைப்பந்துகளை நாங்கள் உங்களுக்கு தந்துள்ளோம்.

பொதுவாக வெறும் விதைகளை மண்ணில் விதைத்தால் கடும் வெப்பத்தால் முளைக்கும் திறனை விதைகள் இழந்து விடும். இதனை தவிர்த்திடும் நோக்கத்தில் இந்த விதைப்பந்தானது உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வெளியே செல்லும் போது தரிசு நிலங்கள், வனப்பகுதிகள் போன்ற இடங்களில் தூக்கி வீசி சென்று விடலாம்.

நீங்கள் வீசிய செல்லும் விதைப்பந்துகளின் உள்ளே உள்ள விதைகள் மழை பெய்யும் வரையிலும், எலி, எறும்பு, குருவிகளிடமிருந்து பாதுகாப்பாக இருந்து கண்டிப்பாக முளைத்திடும். எனவே நீங்கள் கூட ஓய்வு நேரத்தில் விதைப்பந்துகளை உருவாக்கி வைத்து வெளியே செல்லும்போது நல்ல இடம் பார்த்து வீசி மரம் வளர்ப்பதற்கு உறுதுணையாக இருங்கள் என்றார்.

இதில், ஆசிரியை&ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், தோட்டக்கலைத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here