தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 776 பேருக்கு கொரோனா 7 பேர் பலி – மொத்தம் பாதிப்பு 13,967 பேர் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

0
10
minister vijayabaskar

இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ’’தமிழகத்தில் இன்று பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 689 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. வெளிநாடுகளில் கொரோனா நெகடிவ் என முடிவு அறிவிக்கப்பட்ட தமிழகம் திரும்பிய 7 பேருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. மாந்லத்தீவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்கள்இல் இருந்து வந்த 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கேரளா, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதனடிப்படையில் தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கொரோன்பா பாதிப்பு எண்ணிக்கை 13, 967 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பாதிப்பில் 479 பேர் ஆண்கள், 297 பேர் பெண்கள். மொத்த பாதிப்பில் 8975 பேர் ஆண்கள். 4,989 பேர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 3 தமிழகத்தில் இன்று மொத்தம் 16 மாவட்டங்களில் புதிய பாதிப்பும் எதுவும் இல்லை.

சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டு -34, திண்டுக்கல் -1, கள்ளக்குறிச்சி -1, காஞ்சிபுரம்-13, கரூஉர்-1,மதுரை-2, ராணுப்பேட்டை -4, சிவகங்கை-1, தென்காசி -5,தஞ்சாவூர்-1,தேனி-3, திருப்பத்தூர்-1, திருவள்ளூர்-42,திருவண்ணாமலை-3,தூத்துக்குடி-5,வேலூர்-1,விழுப்புரம்-4

தமிழகத்தில் இதுவரை மொத்த மரணங்கள் எண்ணிக்கை 94 ஆகும். பிறமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா உறுதியாவதுதான் தற்போதைய புதிய சவால் ஆகும்’’ இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here