8 மணி நேரம் 12 மணி நேரம் ஆக்காதே.. ஓய்வு வயதை 58 -லிருந்து 59 ஆக்காதே..ஸ்ரீவையில் ஆர்ப்பாட்டம்

0
6
srivaikundan news

ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

8மணிநேர வேலை நேரத்தை 12மணிநேரமாக உயர்த்தக்கூடாது, அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கக்கூடாது, போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதி, முககவசங்கள் வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவைகுண்டம் அரசு பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்புக்கொடி ஏந்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப்., தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ., மத்திய சங்க துணைத்தலைவர் குமரகுருபரன், எல்.பி.பி., செயலாளர் சண்முகசுந்தரம், மாநில சி.ஐ.டி.யூ., சம்மேளனக்குழு உறுப்பினர் சங்கிலிபூதத்தான், ஐ.என்.டி.யு.சி மாவட்ட துணைத்தலைவர் சந்திரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்தும், போராட்டத்தின் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் சண்முகவேல், முனீஸ்வரன், சிவசுப்பு, ஜீவானந்தம், கிருஷ்ணகுமார், சரவணன், சிவகளைபிச்சையா, பழனிராஜ், ஆனந்த கந்தன், சுப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here