ஆதிச்சல்லூர், சிவகளையில் அகழ்வாய்வு பணிகள் தொடங்கியது – அடுத்து குமரிக்கண்டம் ஆய்வு செய்யப்படுமா?

0
387
athichanallur

உலகமே தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிய துடிக்கிறது. அந்த வகையில் தொன்மையான தமிழ் மக்களும் துடியாய் துடித்துக் கொடிருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்தவர்கள் ஆதிக்கம் செய்ய துடிப்பதே இதற்கு காரணம்.

உலகில் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழிக்கும் அதனை பேசும் தமிழனுக்கும் நீண்ட வரலாறு இருக்கிறது. உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது ஆதிச்சநல்லூர். இவற்றின் முழுமையான வரலாற்றை நீண்டகாலமாக தேடிக் கொண்டிருக்கும் தமிழனுக்கு அது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

அதற்கு விடை கிடைக்கும் வகையில் தமிழகத்திலுள்ள் தொன்மைகளை ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்து, அதற்கு நிதியும் ஒதுக்கி, செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரிய விசயமே. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூ மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் நடக்க இருக்கின்றன.

ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அகழாய்வு பணிகள் துவங்க உள்ளதாகவும், இந்த பணியை அமைச்சர் மா.பாண்டியராஜன் துவக்கி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

என்றாலும் அகழாய்வு பணிகளை உடனே துவங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால், இன்று அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பகுதியைப் பொறுத்தவரை தற்போது நடைபெறுகிற அகழாய்வு பணி 6ம் கட்ட அகழாய்வாகும்.

இதற்கு முன்னர் 1876, 1902, 1905, 2004, 2005 என வருடத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் வெளிநாட்டினர் மற்றும் மத்தியல் தொல்லியல் துறை சார்பாக நடந்தது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணியானது நடக்கிறது.

சிவகளையை பொறுத்த வரை முதல் முறையாக இந்த பகுதியில் அகழாய்வு பணியானது துவங்க உள்ளது. எனவே சிவகளை அகழாய்வு பணி பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு பொருட்கள் என 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன், சிவகளையில் தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் தலைமையின் அகழாய்வு பணி துவங்கியது.

இதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள், வரவேற்கிறார்கள். அதேபோல் தமிழன் ஏகோபித்த நகரத்துடன் வாழ்ந்தான் என்பதற்கு குமரிக்கண்டமும் முக்கிய சாட்சியாகும். இது தமிழனுக்கும் மட்டுமான பெருமை அல்ல. இந்தியா முழுவதுமான பெருமை கொண்டதாகும். எனவே மத்திய, மாநில அரசுகள், குமரிகண்டம் என்கிற தமிழனுன் தொன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

தமிழக தொல்லியல்துறை சிவகளை களத்தை அகழாய்வு செய்யும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. சிவகளை, கொடுமணல் மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுக்காக 2 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதில் சிவகளையில் அகழாய்வுப்பணிக்கு முதல்கட்டமாக ரூ.35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்தில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் உதயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சிவகளையில் ஆய்வுப்பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோணா ஊரடங்கு காரணமாக அகழாய்வு பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், தொல்லியல் அலுவலர்கள் பிரபாகரன், தங்கதுரை, காசிலிங்கம் உள்பட அதிகாரிகள் முன்னிலையில் வகையில் இன்று தொல்லியல் அகழாய்வு பணி தொடங்கப்பட்டது.

சிவகளையில் தொல்லியல் அகழாய்வு தொடங்கப்பட்டது குறித்து தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் பேட்டி அளிக்கையில் தென் தமிழகத்தின் பழமை நாகரீகத்தை அறியும் வகையில் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. இதில் சிவகளை பகுதியில் தொல்லியல் ஆய்வுக்கு தமிழக அரசு 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று சிவகளையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணியில் ஐந்து தொல்லியல் துறை அலுவலர்கள் 15 ஆராய்ச்சி மாணவர்கள், மற்றும் இவ்வூரைச் சேர்ந்த 100 பணியாட்களை கொண்டு இந்த பணியானது மேற்கொள்ளப்படுகிறது. இங்கு வெளிக்கொணரும் பொருட்கள் மூலம் நமது தமிழர் நாகரீகம் இன்னும் முன்நோக்கி செல்லும் என்றார்.

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here