பணத்துக்காக பெண் குழந்தை ஒன்றரை லட்சத்திற்கு விற்பனை – நண்பர் செய்த பாதகம்

0
157
kuzanthai sales

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி. இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அஷ்ரப் அலிக்கும் அவரது மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் இரண்டு பெண் குழந்தையையும் வளர்க்கும் பொறுப்பு அஷ்ரப் அலிக்கும் ஏற்பட்டது. இதில் கஷ்டம் இருந்துவந்ததால், ஒரு பெண் குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துவிட முடிவு செய்தார். அதற்கு உதவுமாறு தனது நண்பரிடம் கேட்டுக்கொண்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட அவரது நண்பர் அந்த 3 1/2 வயது பெண் குழந்தையை காப்பகத்தில் சேர்த்துவிடுவதாக இவரிடமிருந்து வாங்கி சென்றார். ஆனால் காப்பகத்தில் சேர்க்கவில்லை. அதற்கு பதிலாக ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். இதற்கிடையே தனது குழந்தையை காப்பகத்தில் சென்று பார்க்க வேண்டும் என விரும்பிய அஷ்ரப் அலி தனது நண்பரிடம் இது குறித்து பேசியிருக்கிறார். ஆனால் அவரது நண்பர் பலமுறை தட்டிக் கழித்து வந்திருக்கிறார். தொடர்ந்து கேட்டதால், மதுரையில் உள்ள ஒரு இடத்தில் குழந்தை இருப்பதாக கூறி ஒரு முகவரியை கொடுத்திருக்கிறார்.

அஷ்ரப் அலி அங்கு சென்று பார்த்த போது, அவர் கொடுத்த முகவரியில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போன் மூலம் இது குறித்து தனது நண்பரிடம் கேட்டபோது குழந்தையை விற்று விட்டதாகவும் இதை வெளியே கூறினால் காவல்துறையினரிடம் புகார் அளித்து விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஷ்ரப் அலி, மதுரை கலெக்டரிடம் நடந்ததைக் கூறி மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். மதுரை கலெக்டர் காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து உடனடியாக அந்த குழந்தையை கண்டு பிடிக்கும்படி உத்தரவிட்டார். மதுரை கலெக்டரின் உத்தரவின் பேரில் அஷ்ரப் அலியின் நண்பரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் அளித்த தகவளின்படி காவல்துறையினர் அடுத்த ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லாயல் மில் பகுதியில் ஒரு தம்பதியிடம் குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த இடத்திற்கு நேரில் சென்ற அதிகாரிகள், வீடியோகால் மூலம் அந்த குழந்தையை தனது தந்தையிடம் பேச வைத்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜோதிகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜோதிகுமார் தலைமையில் சென்ற அலுவலகர்கள் குழந்தையை மீட்டு தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணைக்கு பின் குழந்தை தனது பெற்றொரிடம் ஓப்படைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜோதிகுமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here