திருச்செந்தூரில் பிளஸ் – 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது – மாவட்ட கல்வி துறை ஏற்பாடு !

0
49
plus 2

திருச்செந்தூர், மே 27

திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. அரசு உத்தரவுபடி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள் திருத்தம் பணி துவங்கியது. இதற்காக சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்களுக்கு 6 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நேற்று துவங்கியது. திருச்செந்தூர் கல்வி மாவட்டத்திற்கு மணக்காடு காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் பள்ளியில் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது. மேலும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் காலை மற்றும் மாலை இரு நேரங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பள்ளிக்கு வந்த ஆசியர்கள் மு¬ற்படி சானிடைசர் மூலம் கையை சுத்தும் செய்து மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவுபடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி ஆலோசனைபடி இப்பள்ளயில் நேற்று மட்டும் 40 முதன்மை மதீப்பீட்டாளர்கள் மற்றும் கூர்ஆய்வர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இப்பணியை திருச்செந்தூர் கல்வி மாவட்ட அதிகாரி லெட்சுமணசாமி ஆய்வு செய்தார்.

இந்த மையத்திற்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அரசு சிறப்பு பஸ் இயக்கப்பட்டு ஆழ்வார்திருநகரி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, காயாமொழி வழியாக மணக்காடு காஞ்சி பள்ளிக்கு வந்தடைந்தது. அதே போல் சாத்தான்குளத்திலிருந்து புறப்பட்டு அரசு பஸ் நஞ்கைமொழி, மெஞ்ஞானபுரம், உடன்குடி, தண்டுபத்து, பரமன்குறிச்சி, காயாமொழி வழியாக மணக்காடு காஞ்சி பள்ளிக்கு இயக்கப்பட்டது. திசையின்விளையிலிருந்த உடன்குடிக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டது. மேலும் ஆத்தூரிலிருந்து ஆறுமுகநேரி, காயல்பட்டணம், வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூர் வழியாக காஞசி பள்ளிக்கு தனியார் பள்ளி வாகனம் இயக்கப்பட்டது. இந்த பஸ்கள் காலை 7 மணிக்கு அந்த ஊர்களிருந்து புறப்பட்டு காஞ்சி பள்ளிக்கு வந்து சேர்ந்தது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. பிளஸ் 2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில் இன்று(28ம் தேதி) உதவி மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்யும் பணியில் 360 ஈடுப்பட உள்ளதாகவும், இவர்களுக்கு தேவையான முன்னெற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் கல்வி மாவட்ட அதிகாரி லெட்சுமணசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here