நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய சிறைச்சாலை இருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட அந்த சிறைச்சலையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1300 பேர் இருக்கிறார்கள். அந்த கைதில்களில் இருவருக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ’அந்த இரு கைதிகளும் மற்றொரு வழக்கு விசாரணைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது புழல் சிறையில் இரண்டு நாட்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனராம். கடந்த 17-ம் தேதி பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து வந்தபிறகு இருவரும் தனிமைபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில்தான் அவர்கள் இருவருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கைதிகளை சென்னைக்கு அழைத்து சென்ற போலீஸாருக்கும் டெஸ்ட் நடக்கௌள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.
நடுநிலை.காம்