காயாமொழியில் லோ வால்ட்டேஜ், ஹை வால்ட்டேஜ் பிரச்னை – நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

0
161
transformer

நாசரேத்.மே.29: தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் நிலவும் மின்சார பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, காயாமொழி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், காயாமொழி இளநிலை மின்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் ஊரில் மின்சாரம் சீராக இல்லாமல் சப்ளை செய்யப்படுகிறது. அதனால் மோட்டார், மின்சாதனங்கள் அடிக்கடி பழுதடைகிறது. அதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். கடந்த 28.4.2017-ல் மின்சார சப்ளையில் உள்ள பிரச்னை குறித்து புகாரளித்துள்ளோம். அந்த மனுவையடுத்து புதிய மின்மாற்றிகள் வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதனால் இந்தப் பிரச்னை சரியாகிவிடும் எனக்கூறினர். ஆனால் இன்றுவரை மின்மாற்றிகள் அமைக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து மின்சப்ளை சரியில்லாத காரணத்தால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகிறோம்.

தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்பட்டுவருகின்றனர். மழைகாலத்தில் மழை பெய்த அடுத்த சில நிமிடங்களில் மின்தடை ஏற்படுகிறது. லோவால்ட்டேஜ், ஹைவால்ட்டேஜ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு முதல்வர், மின்சார துறை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், திருச்செந்தூர் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், காயாமொழி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காயாமொழி மக்களின் மின்சார பிரச்னைக்கு மின்சாரத் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here