விவி நிறுவனம் மீது வழக்குப் பதிவு – சட்டவிரோதமாக தாது மணல் பதுக்கி வைத்திருந்தாக புகார் !

0
269
vv news

தூத்துக்குடி சட்டவிரோதமாக தடையை மீறி தாது மணல் பதுக்கி வைத்திருந்தாக விவி டைட்டானியம் என்கிற தனியார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் விவி டைட்டானியம் என்கிற தனியார் தொழிற்சாலை நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தடையை மீறி தாது மணல் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக மீளவிட்டன் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம அதிகாரி ராதா, மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டபோது, அங்குள்ள குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 10,500 மெட்ரிக் டன் இலுமினேட் என்ற கணிம மணல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனம் மீது 420, 379, 21(1), 21 (4ஏ), 21 (4), MMDR Act ஆகிய பிரிவுகளின் கீழ் சிப்காட் போலீஸ் வழக்குப் பதிவு இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தாய்லாந்து நாட்டிலிருந்து கடந்த மாதம் 25ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு கப்பலில் தாது மணல் கொண்டு வரப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த மணலை இறக்குமதி செய்ய அனுமதிக்க கூடாது, என தூத்துக்குடி துறைமுக சபை தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பினார். மேலும், விவி நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பபட்டது.

இதை எதிர்த்து அந்நிறுவனத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தாது மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கிவைக்க மட்டும் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் துறைமுகத்தில் இருந்து தொழிற்சாலைக்கு கனிம மணல் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here