ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கிராம மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 122 இஸ்திரி பெட்டிகள்

0
24

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது.மேலும் பெண் தொழில் முனைவோர்களுக்கான நிதிஉதவி, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, சிறப்பு மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் போன்றவற்றை நடத்தி பொதுமக்களின்ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களின்வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தேவை அதிகரித்து வருவதையொட்டிஅக்கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முத்துசரம் – தாமிர சுரபிதிட்டத்தில் அக்கிராமங்களுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்து வருகிறது. இதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும்பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தூத்துக்குடி பகுதியை சுற்றி சிறுதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் நிறுவனம்  கிராம மக்கள் 122 பேருக்கு 5 லட்சரூபாய் மதிப்பிலான இஸ்திரி பெட்டிகளை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இஸ்திரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.

 பண்டாரம்பட்டி கிராம சமுதாய தலைவர்கள் செல்லப்பாண்டியன் மற்றும் ஹரிகிருஷ்ணன், மீளவிட்டான் கிராமத் தலைவர்கள் முத்துராஜ், பழனிகுமார்உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தனவேல், ராதாகிருஷ்ணன், சர்வேசன், குமரவேந்தன், விமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இஸ்திரி போடும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here